வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (11:16 IST)

கெட்டப்பில் கமலை மிஞ்சிய பாபி சிம்ஹா... கலெக்ஷனிலும் கரை சேர்வாரா?

கெட்டப்பில் கமலை மிஞ்சிய பாபி சிம்ஹா... கலெக்ஷனிலும் கரை சேர்வாரா?

பாபி சிம்ஹா தனது அசால்ட் புரொடக்ஷன் சார்பில் தயாரித்து நடித்து வரும் படம், வல்லவனுக்கு வல்லவன். தசாவதாரத்தில் கமலுக்கு 10 வேடங்கள்தான். இதில் பாபி சிம்ஹாவுக்கு பதினோரு கெட்டப்புகள். 


 
 
விஜய் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்கிவரும் இந்தப் படம்தான் பாபி சிம்ஹாவின் கரியரை நிர்ணயம் செய்யப் போகிற படம். ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு பாபி காட்டிய அலட்டலில் அனைத்து தயாரிப்பாளர்களும் அப்செட். 
 
அவர் நடித்த படங்கள் ஓடி லாபம் பார்த்திருந்தாலாவது அலட்டலை அட்ஜஸ்ட் செய்திருப்பார்கள். ஆனால், சொல்லி வைத்த மாதிரி அனைத்துப் படங்களும் தோல்வி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோவும் தண்ணி கேட்க, பாபியின் நிலைமை முற்றும் நிலைக்கு வந்துள்ளது.
 
வல்லவனுக்கு வல்லவன் படத்தை தேனாண்டாள் வாங்கி வெளியிடுவதாக இருந்தது. இப்போது அவர்களும் கைகழுவியதாக கேள்வி.
 
ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வெளியிடப்படும் டீசர் ஏதாவது எதிர்பார்ப்பை கிளப்பினால்தான் வல்லவனுக்கு வாழ்வே.