நவம்பர் 8ல் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனனுக்கு நிச்சயதார்த்தம்?


Caston| Last Updated: புதன், 4 நவம்பர் 2015 (16:31 IST)
இருசக்கர வாகனத்துக்கு தலைக்கவசம் மாதிரி, இதுபோன்ற தலைக்கவசம், கேள்விக்குறி. எல்லாம் ஒரு பாதுகாப்புக்குதான்.

 


உறுமீன் படத்தில் நடித்தபோது பாபி சிம்ஹாவுக்கும், ரேஷ்மி மேனனுக்கும் எப்படியோ சிங்க் ஆகியிருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்தியை முந்தித்தரும் பத்திரிகைகள் எப்போதோ சங்கு ஊதிவிட்டன. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று பாபி சிம்ஹா, சங்கு சத்தத்தை சட்டைசெய்யவில்லை. சினிமாவில் காதலிக்கிற ஜோடி வழக்கமாகச் சொல்லும் பொய்தானே என்று ஊடகங்களும் பொறுமை காத்தன.

சமீபத்திய தகவல், நவம்பர் 8 இருவருக்கும் நிச்சயம் நடக்கப் போகிறது. சென்னை புறநகரில் உள்ள கார்டனில்தான் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு என்று கோடம்பாக்க துப்பறியும் புலிகள் கண்டு பிடித்துள்ளன.

அசின் திருமணம் போல் இதுவும் கற்பனையாக இருக்குமோ என்ற பயத்தில் போட்டதுதான் கேள்விக்குறி.

கல்யாணச் செய்தின்னாலே ஒரு நடுக்கம்தான்.


இதில் மேலும் படிக்கவும் :