தொடர்புடைய செய்திகள்
- விஜய் ஜெயிச்சதால மக்கள் மீது திடீர் பாசமா?!.. லதா ரஜினிகாந்தை விளாசிய புளூசட்ட மாறன்!..
- 10 கோடி பட்ஜெட்!. 1400 கோடி வசூல்!.. ரசிகர்களை கவர்ந்த OBSESSION பேய் படம்...
- ரஜினியும் கமலும் அரசியல் பண்ண வந்தப்போ இத சொன்னீங்களா?!.. பிரகாஷ்ராஜுக்கு புளூசட்டமாறன் கேள்வி...
- விஜயை கண்டு அலறும் தலீவர்!.. கதறுங்க தலீவரே!.. புளூசட்டமாறன் நக்கல்...
- லேட்டானாலும் செய்முறையை கரெக்டா செஞ்சிட்டார்!.. ரஜினியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்..
OBSESSION படத்தை தமிழ்நாட்டில் பார்ப்பது வேஸ்ட்?!.. புளுசட்ட மாறன் போட்ட பதிவு!...
ஹாலிவுட் சமீபத்தில் வெளியான திரைப்படம் Obsession. ஒரு இளைஞன் தன்னுடன் நெருக்கமாக பழகும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த பெண்ணுக்கு அந்த இளைஞன் மீது அப்படி ஒரு எண்ணம் எதுவுமில்லை. இதனால், ஒரு தலைக்காதலில் ஏங்கி தவிக்கிறான் அந்த இளைஞன்.
அந்த நிலையில்தான் நினைப்பது நிறைவேற்றும் சக்தி கொண்ட ஒரு மர்ம பொருள் அவனுக்கு கிடைக்கிறது. அதன்மூலம், ஒரே ஒரு வரம் பெற்றுக் கொள்ளலாம் என்கிற நிலையில் நான் காதலிக்கும் அந்த பெண் இந்த உலகத்தில் என்னை மட்டுமே காதலிக்க வேண்டும். என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என அந்த இளைஞன் வரம் கேட்க அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
சஸ்பென்ஸ் சூப்பர் நேச்சுரல் திரில்லராக வெளியாகியுள்ள Obsession திரைப்படம் உலகமெங்கும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. ஒரு யுடியூப்பர் இயக்கத்தில் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. தற்போது இந்த திரைப்படம் தமிழகத்திலும் பல தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் தனது எக்ஸ் தளத்தில் Obsession திரைப்படம் சென்னையில் பல தியேட்டர்களில் காட்சிகள் அதிகப்படுத்தியிருக்கிறரர்கள். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இந்த படத்துக்கு ஏன் இவ்வளவு ஹைப்? என்ற குழப்பம் வந்துள்ளது. அதற்கு இந்தப் படத்தை வேற நாட்டில் பார்த்த நபர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், இந்தியாவில் சென்சார் இந்தப் படத்தின் பல முக்கியமான காட்சிகளை நீக்கி விட்டார்களாம். அதனால் இந்திய திரையரங்குகளில் இந்த படத்தை பார்ப்பது பிரயோஜனம் இல்லை என்று கூறி வருகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு படுக்கையறை மற்றும் சில வன்முறை காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறது. படம் பெரிதாக ஒன்றுமில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
