50 கோடி ரூபாய் மைல்கல்லைத் தொட்ட மாரி செல்வராஜ் &துருவ் விக்ரம்மின் ‘பைசன்’!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகளவில் 55 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக இந்த படம் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் இலாபத்தைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.