1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bismi comment against actor vishal on rahmohan

ராஜ்மோகன் விஷயத்தில் வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஷால்!.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.

vijay vishal
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் முன்னாள் நடிகர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில்தான், நேற்று அமைச்சரவை பட்டியல் வெளியானது. அதில் எழும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்மோகனுக்கு திரைப்படத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் விஷால் ‘அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.. திரை துறையை சார்ந்த கோரிக்கைகளை எந்த அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? இல்லை 30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதலமைச்சரிடம் வைப்பது சரியாக இருக்குமா?’ என கேள்வி எழுப்பியிருந்தர்.

இதையடுத்து பலரும் விஷாலை திட்டி வருகிறார்கள். இந்நிலையில், இதுபற்றி கருத்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த சினிமா பத்திரிக்கையாளர் பிஷ்மி ‘விஷால் அவர்களின் கருத்து நியாயமற்றது. கடந்த கால திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்தவர்களில் எத்தனை பேர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள்?

கடந்த திமுக ஆட்சியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த மு.பெ.சாமிநாதன், அதிமுக ஆட்சிக்காலத்தில் அதே பதவியில் இருந்த கடம்பூர் ராஜூ உட்பட யாருமே  திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் இல்லை. அந்த வகையில் கடந்த காலத்தோடு ஒப்பிட்டால் தற்போதைய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமே திரைப்படத்துறையோடு தொடர்புடையவர். உண்மை இப்படி இருக்க, விஷால் இப்படி ஒரு விஷமத்தனமான கருத்தை தெரிவிக்கலாமா?’ என பதிவிட்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அவன் உள்ள ஒன்னு வச்சிருந்தான்.. காட்டிட்டான்!.. விஜய் முதல்வரானது பற்றி பெப்சி விஜயன் ஆவேசம்!...