என் மகனை கண்ணில் கூட காட்டவில்லை கதறி அழுத்த தாமரை - சோகமான கதை!

Papiksha Joseph| Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (11:25 IST)

பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பித்தில் இருந்தே வெகுளிர்பான போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தாமரைச்செல்வி. நாடக கலைஞரான இருக்கு விஜய் டிவி பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்து பெருமைப்படுத்தியது. அதற்கு ஏற்றார் போல் தாமரையும் வெகு விரைவில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இடையில் திருநங்கை நமீதா மாரிமுத்துவுடன் அவருக்கு சண்டை ஏற்பட கொஞ்சம் கேட்ட பெயர் வாங்கினார். இந்நிலையில் கடந்த வந்த பாதையின் சோகக்கதை டாஸ்கில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட தாமரைச்செல்வி தன மகனுக்காக கதறி அழுது அவருக்காக தான் நான் பிக்பாஸுக்கே வந்தேன் என்பதை கூறினார்.

தனது மகன் தங்கள் வீட்டுக்கு வராமல் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், நேரிலும் சரி, ஃபோனிலும் சரி தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவனைப் பார்த்து 4 மாதங்கள் ஆகிறது என்றும் கூறி கதறி அழுகிறார். இந்த நிகழ்ச்சியில் இதை சொல்லாவிட்டால், அம்மா படும் கஷ்டம் மகனுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால் தான் இங்கு வந்ததாகவும் கூறினார். தாமரை செல்வியின் சிரிப்பின் பின்னால் நிறைய சோகங்கள் இருக்கும் போல... நாம் முகம் எனும் மலர்ந்த தாமரையைப் பார்த்து மகிழ்கிறோம். ஆனால் அவர் மலர மனம் எனும் வேர்கள் படும் துன்பம் வெளியே தெரிவதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :