திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு வந்து குட்டையை குழப்பும் திவாகர், வியன்னா.. என்ன நடந்தது?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அரோரா சின்க்ளேர், திவ்யா கணேஷ், சபரி நாதன் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக தகுதி பெற்றுள்ள நிலையில், வியன்னா மற்றும் டி.திவாகர் ஆகியோரின் வருகை பழைய மோதல்களை மீண்டும் தூண்டியுள்ளது.
குறிப்பாக, வியன்னா நேரடியாக சாண்ட்ராவிடம் மோதலில் ஈடுபட்டார். அதேபோல், டி.திவாகர் வீட்டின் விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டது திவ்யா கணேஷுடன் மீண்டும் வாக்குவாதத்தை உருவாக்கியது. இத்தனை பதற்றங்களுக்கு மத்தியில், சபரி மற்றும் அரோரா இடையிலான அழகான நட்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வரும் ஜனவரி 17-ம் தேதி விஜய் டிவியில் பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குப்போர் நடந்து வருகிறது. யார் அந்தப் பட்டத்தை வெல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
Edited by Siva