1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bharathiraja rejected vijay to act in his movie

விஜயை வச்சிலாம் படமெடுக்க முடியாது!. அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதிராஜா..

vijay
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களின் பிதாமகனாக இருப்பவர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். பாரதிராஜா அப்போது போட்டுக் கொடுத்த புதிய பாதையில்தான் அவருக்கு பின்வந்த பல இயக்குனர்களின் பயணித்தார்கள்.
 
அவர் இயக்கிய திரைப்படங்கள் காவியங்களாக எப்போதும் நிலைத்திருக்கும். மூன்று முறை தேசிய விருதையும் பாரதிராஜா வாங்கியுள்ளார். வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் பாரதிராஜா மரணமடைந்தார். தற்போது அவரின் உடல் தேனி மாவட்டத்தில் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் அரசு மரியாதைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்..
 
இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு முன் ஒரு ஊடகம் ஒன்று பேட்டி அளித்த பாரதிராஜா ‘என்னுடைய சமகால இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். மிகவும் நெருக்கமான நண்பர். ஒருமுறை அவருடைய மகன் விஜயை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார். விஜய் என் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்.

என்னவோ எனக்கு அப்போது அந்த பையனிடம் எதுவும் தோணவில்லை. ‘ஏன்? உன்னோட படத்துலயே நடிக்க வேண்டியதுதானே’ என சொல்லி விஜயை ரிஜெக்ட் செய்து அனுப்பிவிட்டேன். அன்று நான் நிராகரித்த அந்த பையன்தான் இன்று நம்பர் ஒன் நடிகர்.. இதை விஜயிடமே சொல்லி வருத்தப்பட்டேன். அந்த சம்பவம் என் நினைவில் இருக்கிறது என விஜய் என்னிடம் கூறினார்’ என சொல்லியிருக்கிறர்.
அடுத்த கட்டுரையில்
சொந்த மண்ணில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!.. திரையுலகினர் நேரில் அஞ்சலி..