தொடர்புடைய செய்திகள்
- இப்ப சொல்ல முடியாது!.. அறிவிப்பிலிருந்து பின் வாங்கிய ராகவா லாரன்ஸ்!..
- இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..!
- இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!
- ஒவ்வொரு படத்துக்கும்அட்வான்ஸ் வாங்குறப்ப இத செய்யுங்க… சசிகுமாருக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்!
- சசிகுமாரின் ஃப்ரீடம் படம் பொருளாதார சிக்கலால் ரிலீஸ் தள்ளிவைப்பு!
சினிமாவில் பாரதிராஜாவின் கடைசி ஆசை இதுதான்!.. நிறைவேறாமலே போயிடுச்சே!..
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த பாரதிராஜாவுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீதுதான் அதிகமான ஆசை. அதனால்தான் இளம் வயதிலேயே நண்பர்களை வைத்து நாடகங்களை போட்டுவந்தார். ஒருகட்டத்தில் அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு சென்னைக்கு வந்தார்.
சென்னையிலும் தெரிந்தவர்களையும், நண்பர்களையும் வைத்து நாடகங்களை போட்டு வந்தார். ஒரு கன்னட சினிம இயக்குனரிடம் சில வருடங்கள் உதவியாளராக வேலை செய்த பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவை புரட்டி போட்டது.
அதன் பின் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களையும் இயக்கி இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஒரு இயக்குனராக பாரதிராஜா மாறினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்..
பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்தபின் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் இன்னும் ஒரு நல்ல கதையை படமாக எடுக்கணும்.. நான் பார்த்த வாழ்க்கையை இன்னொரு முறை மக்களிடம் கொண்டு போகணும் என்று கூறியிருந்தார்.
அந்த ஆசை கடைசி வரை அவருக்கு நிறைவேறாமலே போய்விட்டது!..
