தொடர்புடைய செய்திகள்
- எஸ்.கே. படம் டிராப்!.. மீண்டும் தன்னுடைய கேங்கை வைத்து படமெடுக்கும் விபி!...
- கார்த்திக் சுப்பாராஜின் புதிய படம்!.. அதர்வாவுடன் இணையும் உபேந்திரா!.
- மெகா கூட்டணியில் அனில் ரவிபுடி! வெங்கி-அனில் 5 மல்டி-ஸ்டாரர் படம் பூஜையுடன் துவக்கம்!
- மதிமுக எம்.எல்.ஏக்கள் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு: தவெக கூட்டணிக்கு மாறுகிறதா மதிமுக?
- தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே.. கேள்வி - பதில் நேரம் கிடையாது.. சபாநாயகர் அறிவிப்பு
பாக்யராஜ் படத்துக்கு விருது கொடுக்காமல் தவிர்த்த எம்.ஜி.ஆர்!. காரணம் இதுதான்!...
மறைந்த நடிகர் மற்றும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திரையுலகில் சிலரோடு மட்டுமே நெருங்கி பழகினார். அவர்களுக்கு பிடித்தமான இயக்குனர்களில் பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்ள் இருந்தார்கள். இதில், பாக்யராஜின் எல்லா திரைப்படங்களிலும் எம்ஜிஆர் பார்த்துவிட்டு பாரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெண்களை கவரும் படி திரைப்படங்களை எடுத்ததால் பாக்யராஜை தனது கலை வாரிசு என்றும் எம்ஜிஆர் அறிவித்தார். அந்த அளவுக்கு பாக்யராஜின் படங்கள் எம்ஜிஆர்க்கு பிடித்திருந்தது.
பாக்கியராஜ் இயக்கி நடித்து 1981ம் வருடம் வெளியான திரைப்படம் அந்த ஏழு நாட்கள்..
இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வருடத்திற்கான தமிழக அரசு விருது பட்டியலில் அந்த ஏழு நாட்கள் படம் இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு விருது கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அப்போது முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பாக்யராஜ் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி கூறியிருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்னை அழைத்து எம்ஜிஆர் விருது பட்டியலில் உன் படம்தான் முதல்ல இருக்கு.. ஆனா அத நான் அடிச்சிட்டேன் என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.. அவரோ இந்த அரசியல் மிகவும் மோசமானது.. உன் படத்தை ஜனங்க பாராட்டி பிரமாதமா ஓடுது.. இப்ப நான் அந்த படத்துக்கு விருது கொடுத்தால் என்னையும் நீ நடிச்ச பாலக்காட்டு மாதவன் கதாபாத்திரத்தையும் முடிச்சி போட்டு பேசுவானுங்க.. அதனால் அந்த படத்துக்கு இருக்கிற மரியாதை போய்விடும். எனவே, விருது கொடுத்து இந்த படத்தை நான் கெடுக்க விரும்பல என்று சொன்னார்
என சொல்லியிருக்கிறார்.
பெண்களை கவரும் படி திரைப்படங்களை எடுத்ததால் பாக்யராஜை தனது கலை வாரிசு என்றும் எம்ஜிஆர் அறிவித்தார். அந்த அளவுக்கு பாக்யராஜின் படங்கள் எம்ஜிஆர்க்கு பிடித்திருந்தது.
பாக்கியராஜ் இயக்கி நடித்து 1981ம் வருடம் வெளியான திரைப்படம் அந்த ஏழு நாட்கள்..
இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வருடத்திற்கான தமிழக அரசு விருது பட்டியலில் அந்த ஏழு நாட்கள் படம் இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு விருது கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அப்போது முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
என சொல்லியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்