1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (17:47 IST)

தாடிக்குப் பின்னே ஒரு ராணுவத் தகவல்

தாடிக்குப் பின்னே ஒரு ராணுவத் தகவல்

வாகா படத்தில் ராணுவ வீரனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு தாடி வைத்திருப்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது. 


 
 
அதற்கு ராணுவபூர்வமான விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.
 
வாகா படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கியுள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்தின் ஸ்டில்களில் விக்ரம் பிரபு ராணுவ உடையில் இருந்தாலும், அவர் படத்தில் ராணுவ வீரராக நடிக்கவில்லை. எல்லை பாதுகாப்பு படைவீரராக வருகிறார். ராணுவத்திலிருந்து மாறுபட்டது எல்லை பாதுகாப்புப் பணி. 
 
இந்திய எல்லை பாதுகாப்பு பணியினர் குறித்து டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்திய எல்லையை பாதுகாப்பதுதான் இவர்களின் பணி. பனி மூடிய சிகரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் யாருமற்ற தனிமையில் இவர்கள் எல்லை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பல இடங்களில் இந்த படைப்பிரிவினர் சிலரைத் தவிர அந்தப் பிராந்தியத்தில் ஈ காக்கா கூட இருக்காது. இவர்களுக்கு ராணுவ வீரர்களைப் போன்று க்ளீன் ஷேவ் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது.
 
விக்ரம் பிரபு தனது தாடிக்கு பின்னேயுள்ள விளக்கத்தில் ஒரு ராணுவ ரகசியத்தையே வைத்துள்ளார்.... ஜாக்கிரதை.