1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. balan movie trailer video is out

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரின் புதிய படம் பாலன்!.. வெளியான டிரெய்லர் வீடியோ!..

balan
மலையாளத்தில் உருவாகி தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் மஞசுமெல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு செல்லும்போது அந்த குகையில் ஒருவர் தவறி விழுந்து விடுகிறார்.

தவறு விழுந்தவரை நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பதுதான் படத்தின் கதை. குறிப்பாக  குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்கிற பாடலை இந்த படத்தில் சரியான இடத்தில் இயக்குனர் பயன்படுத்தியிருந்தார். அதனாலயே இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது..

இந்த படத்திற்கு பின் பாலன் என்கிற திரைப்படத்தை சிதம்பரம் இயக்கி முடித்திருக்கிறார். ஒரு தாய், அவரின் சிறு வயது மகன் மற்றும் அவர்களை சுற்றி சிலர் அவர்களுக்கு இடையே மோதல் என சஸ்பென்ஸ் திரில்லர் படமாக பாலன் உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. வருகிற 19ஆம் தேதி இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனம்தான் பாலன் படத்தை தயாரித்திருக்கிறது.



About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
வாங்குன பணத்தை திருப்பி கொடுங்க!.. ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட ஆர்டர்!..