1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Bahubali re release update by SS Rajamouli

பாகுபலி இரண்டு பாகங்களும் ஒரே படமாக… ரிலீஸ் தேதியை அறிவித்த ராஜமௌலி!

பொன்னியின் செல்வன்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி... ‘சக்தி திருமகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!