மீண்டும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்!!

Sasikala| Last Modified புதன், 14 டிசம்பர் 2016 (15:57 IST)
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். இந்நிலையில் அவர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

 
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜிங்கா’ என்ற ஹாலிவுட் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
 
இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி உள்ள நிலையில் அடுத்த (2017) ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்த படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானின் இருவேறு பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
இதனை அகாடமி விருதுகள் இணையத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஜனவரி 24-ம் தேதி இறுதிப் பட்டியலை வெளியிட இருக்கிறது. பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் விழாவில் இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :