பாகுபலி 2 ட்ரெய்லர் தாமதமாக இதுதான் காரணமா?

Sasikala| Last Modified திங்கள், 27 பிப்ரவரி 2017 (17:35 IST)
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. இப்படம்  இரண்டு பாகமாக தயாரானது. முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 
முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் எப்போது  வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது இப்படம் 2017 ஏப்ரல் 28 அன்று படம் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
 
ஆனால் ட்ரெய்லர் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு அனுஷ்கா தான் காரணம் என்பதும், அதாவது முதல்  பாகத்தில் இருந்தது போன்று இல்லாமல் அனுஷ்கா தற்போது குண்டாகிவிட்டார். அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கூடுதலாக விஎப்எக்ஸ் தேவைப்படுகிறதாம். இந்த தகவலை ராஜமெளலியே உறுதிபடுத்தியுள்ளார். இருப்பினும் ட்ரெய்லர்  தாமதத்திற்கு அனுஷ்காவின் வெயிட் மட்டுமே காரணம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :