நான்கு நடிகைகளுடன் அதர்வாவின் ஆட்டோகிராப் படம்


Cauveri Manickam| Last Updated: புதன், 17 மே 2017 (17:32 IST)
அதர்வா நடித்துள்ள ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்தில், நான்கு ஹீரோயின்களுடன் நடித்துள்ளார் அதர்வா.

 

 
ஜெமினி கணேசனாக அதர்வாவும், சுருளி ராஜனாக சூரியும் நடித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இந்தப் படத்தை, ஓடம் இளவரசு இயக்கியுள்ளார். ஜெமினி கணேசனின் தீவிர ரசிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கும் டி.சிவா, தன் மகனுக்கு அதே பெயரை வைப்பவராக நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சிரிப்பு வில்லனாக நடித்துள்ளார் சூரி.
 
ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். உண்மையில், அதர்வா இப்படித்தான் பெண்களுடன் சுற்றுவாராம். அவருடைய ‘ஆட்டோகிராப்’ தான் இந்தப் படம் என்கிறார்கள். இந்தப் படத்தை, டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது அவர்களுக்கு 25வது படம்.


இதில் மேலும் படிக்கவும் :