வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (12:58 IST)

கன்னத்தில் அறைந்தார்.. எட்டி உதைத்தார்.. விஜயின் உதவியாளர் பேட்டி..

vijay
நடிகர் விஜய் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்தவர். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. விஜய் மிகவும் அமைதியானவர்.. யாரிடமும் அதிகம் பேசாதவர்.. சினிமாவை தவிர நிஜத்தில் அவர் கோபப்பட்டு மக்கள் யாரும் அதிகம் பார்த்ததில்லை. தற்போது அரசியல் மேடைகளில் திமுக பற்றி விமர்சிக்கும் போது மட்டும் அவரின் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிகிறது. மற்றபடி சிரித்துக்கொண்டே அமைதியான முகத்தோடு இருப்பவர்தான் விஜய்..

ஆனால் விஜய்யிடம் 10 வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்த செல்வம் என்பவர் கொடுத்துள்ள பேட்டி வேறு மாதிரி இருக்கிறது. விஜய் தன்னை அடித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.
ஒரு நாள் சாப்பிடும் டேபிளில் அவருக்காக உணவுகளை எடுத்து வைத்து கொண்டிருந்தேன். வெளியே யாரிடமோ செல்போனில் மிகவும் கோபமாக பேசிக் கொண்டிருந்தார் விஜய் சார்.

அதே கோபத்தோடு சாப்பாடு டேபிளில் அமர்ந்த அவர் சாப்பிட தொடங்கியதும் என் கன்னத்தில் அறைந்தார்.. நான் அருகில் இருந்த ஷோபாவில் விழுந்தேன்.. என்னை எட்டி உதைத்தார்.. அவர் எதற்காக என்னை அடித்தார் என்பது எனக்கு தெரியவே இல்லை.. அடுத்த நாள் கேரவானில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்’ என்று செல்வம் சொல்லியிருக்கிறார்..

மேலும், ஒருகட்டத்தில் அந்த வேலையை விட்டுவிட்டதாகவும், அதன்பின் தனக்கு சரியான வேலை கிடைக்காமல், குடும்பத்தை நடத்தவே சிரமப்படுவதாகவும் செல்வம் கூறியிருக்கிறார்.
இந்த செய்தியை படிக்கும் ரசிகர்கள் ‘விஜய்க்கு கோபம் வந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வாரா? என அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்..