ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின்: வரவேற்குமா கோலிவுட்?

Sugapriya Prakash| Last Updated: சனி, 14 செப்டம்பர் 2019 (17:46 IST)
நடிகை அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 2001 ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
அடுத்தடுத்து கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தவர், பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். பாலிவுட் சென்ற கையோடு திருமணம் செய்து கொண்டு ஆரின் என்ற பெண் குழந்தைக்கு தாயானார்.
இந்நிலையில் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம், அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. 
 
தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றேதான் கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது அவர் தேர்வு செய்யும் கதைக்களத்தை பொருத்தே உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :