1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. arasan shooting going very slow because of vetrimaran

மாசக்கணக்குல ஷூட்டிங் நடந்தும் இவ்ளோதானா!. அரசன் படம் முடிஞ்ச மாதிரிதான்!...

arasan movie update
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார், சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இயக்குனர் நெல்சன் மற்றும் சிம்பு  இருவரையும் வைத்து புரமோஷன் வீடியோவையும் வெற்றிமாறன் வெளியிட்டார்.

ஏற்கனவே வெளியான வடசென்னை படத்தின் நீட்சியாக அரசன் படம் உருவாக வெற்றிமாறன் கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. அவ்வப்போது ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் காரணமாக இருந்தார்.

ஏனெனில் அவரிடம் 3 படங்களில் நடித்துகொடுப்பதாக அட்வான்ஸ் வாங்கிவிட்டு சிம்பு நடித்து கொடுக்காததால் அவர் படப்பிடிப்பை நிறுத்தினார். அதன் பின் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ஷூட்டிங் துவங்கியது. இந்நிலையில்தான், இதுவரைக்கும் படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்து இதுவரை வெறும் 20 நாட்கள் மட்டுமே அரசன் படத்தின் ஷூட்டிங் நடந்திருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. சிம்புவிடம் வெற்றிமாறன் மாட்டிக் கொண்டாரா இல்லை வெற்றிமாறனிடம் சிம்பு மாட்டிக் கொண்டாரா என்பது தெரியவில்லை..

இந்த செய்தி சிம்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஒருபக்கம் ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெற்றி மாறன் இயக்கி வருவதால் அரசன் படத்தின் சூட்டிங் வேகமாக நடக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது..
அடுத்த கட்டுரையில்
இனிமே முழுக்க ஆன்மீகம்தான்!.. ஆளே மாறிய ரவி மோகன்!.. வைரல் போட்டோ!...