1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. arasan movie third schdule starts soon

Arasan: அரசன் ஷூட்டிங் நடக்குதா இல்லையா?.. புது அப்டேட்!...

arasan
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க துவங்கிய திரைப்படம் அரசன். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடைபெறவில்லை, ஏனெனில், சிம்பு  தொடர்பாக எழுந்த பிரச்சனையால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்திற்கு குடைச்சல் கொடுத்தார்.

அதனால் சில நாட்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதோடு அரசன் திரைப்படம் 20 நாள் மட்டுமே சூட்டிங் நடந்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. எனவே அரசன் சூட்டிங் தொடர்ந்து நடக்கிறதா? இல்லையா? என என்பது தெரியாமல் சிம்பு ரசிகர்கள் கவலை அடைந்தனர்..

இந்நிலையில்தான் அரசன் ஷூட்டிங் தற்போது தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவது தெரியவந்திருக்கிறது. ஐசரி கணேசனுடன் பிரச்சனை பேசி தீர்க்கபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், சென்னை கிழக்கு கடற்கு கரை சாலையில் வடசென்னை போல ஒரு செட்டை உருவாக்கி இருக்கிறார்கள்..

ரஞ்சித் இயகக்த்தில் ரஜினி நடித்த காலா படத்திற்காக அமைக்கப்பட்ட ‘தாராவி’ செட்டை விட மிகவும் நேர்த்தியாக இந்த வட சென்னை செட் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் அரசன் பட செட். இதில், போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள விஜய்சேதுபதி கலந்து கொள்கிறார். மேலும், அமீர் மற்றும் ஆண்ட்ரியாவும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். 3 மாதங்களில் படப்பிடிப்பை முழுமையாக முடித்து தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
சிம்பு நடிக்கும் புதிய படம்!.. அரசன் எப்போ ரிலீஸ்?!. பரபர அப்டேட்!..