1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. arasan movie shooting is stopped now

அரசன் ஷூட்டிங் நிறுத்தம்!.. துபாய்க்கு போன சிம்பு!.. நடப்பது என்ன?...

arasan
சின்ன வயதிலிருந்தே சினிமாவில் இருந்தும், சிறந்த நடிகராக இருந்தும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து சினிமாவில் நடிக்காதவர் சிம்பு. அவ்வப்போது படங்களுக்கு இடைவெளி விட்டுவிடுவார். ஒருபக்கம் அவர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கண்டிப்பாக பிரச்சனையை சந்திக்கும்.

அதற்கு பெரும்பாலும் சிம்புவே காரணமாக இருப்பார். சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த வருடம் செப்டம்பர் வந்தால் ஒரு வருடம் முடிகிறது. இந்த படத்தின் காட்சிகளை கோவில்பட்டி மற்றும் சென்னை என மாறிமாறி எடுத்து வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில்தான், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்து நடிக்கவுள்ள காட்சிகளில் சிம்பு இன்னும் கொஞ்சம் இளமையாக தெரிய வேண்டும் என்பதால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிம்பு இறங்கியிருக்கிறார். அதோடு, அவர் துபாய்க்கு சென்றுவிட்டார். இந்த இடைவெளியில் இதுவரை எடுத்த காட்சிகளை எடிட்டிங் செய்யும் பணியில் வெற்றிமாறன் ஈடுபட்டிருக்கிறாராம்.
அடுத்த கட்டுரையில்
மமிதாவும் இல்ல.. சஞ்சனாவும் இல்ல!.. தனுஷின் புதிய படத்தில் அந்த நடிகை!...