செவ்வாய், 10 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2025 (10:02 IST)

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் அதிகப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ரசிகர்களின் அன்புத் தொல்லை குறித்துப் பேசியுள்ளார். அதில் “திருமண விழாக்களுக்கு சென்றால் அங்கே சாப்பிடக் கூட முடியாது. ரசிகர்கள் வந்து புகைப்படம் வேண்டும் என்று கேட்பார்கள். இதனால் நான் திருமண விழாக்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவேன். இது போன்ற சம்பவங்கள் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தன.

இதுபோல வெளிநாட்டில் பிரபலங்களிடம் கேட்டார் அவர்கள் வெளிப்படையாக மறுத்துவிடுவார்கள். அதனால் ரசிகர்கள் கேட்பதே இல்லை. இந்திய பிரபலங்கள் மென்மையாகப் பேசுவார்கள் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.