தொடர்புடைய செய்திகள்
- இயக்குனர் செட் ஆகவில்லை.. கதாநாயகனாகும் ஷங்கர் மகன்.. ஜோடியாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நடிகை..
- மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ படக் கூட்டணி… டைட்டில் அறிவிப்பு!
- துப்பாக்கிய குடுத்துட்டா நான் தளபதி ஆயிடுவேனா? - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
- அஜித்தை திடீரென சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன்.. என்ன காரணம்?
- சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?
சசி இல்லனா நான் இப்போ டைரக்டர் இல்ல!.. ஏ.ஆர் முருகதாஸ் ஃபீலிங்..
அஜித்தை வைத்து தீனா திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன்பின் ரமணா படத்தை இயக்கியதும் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய கஜினி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து முருகதாஸ் இயக்கினார்
இந்நிலையில் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி திரைப்படத்தின் விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் நான் தீனா படத்தை துவங்கிய போது எனக்குள் நிறைய குழப்பம் இருந்தது. இது சரியாக வருமா?. சரியாக எடுக்க முடியுமா? என்கிற பயமும் இருந்தது.. எனவே இரண்டு நாட்கள் ஷூட்டிங்கை நடத்திவிட்டு இந்த படத்தை விட்டு விடலாம் என்று கூட நான் நினைத்தேன்.
அந்த சமயத்தில் என் அதிஷ்டம் சசியை நான் ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். அப்போது எனக்கு பட வாய்ப்பு கிடைத்த்து பற்றி மிகவும் சந்தோஷப்பட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். ஆனால் நானோ இல்லை. இது நடக்காது என்று சொன்னேன். அதிர்ச்சியுடன் என்னாச்சி? என்று கேட்டார். நான் என் பிரச்சினையை சொன்னேன்.
என்னை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போன சசி இதோ பார் நீ வேண்டாம் என்று விலகினாலே ஒரு படம் பிளாப்தான்.. அந்த தப்பை நீ பண்ணாத.. எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும் நெனச்சதெல்லாம் அப்படியே எடுக்க முடியாது.. 100 சதவீதமெல்லாம் தேவையில்லை.. நீ மனசுல நினைச்சதை 70 சதவீதம் எடுத்துட்டாலே ஆடியன்ஸ்க்கு அது 100 சதவீதமா மாறிடும். நம்பிக்கையோடு படத்தை எடு என்று சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே அடுத்த நாள் தீனா படத்தின் ஷூட்டிங்கை துவங்கினேன் என்று கூறினார்.
இந்நிலையில் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி திரைப்படத்தின் விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் நான் தீனா படத்தை துவங்கிய போது எனக்குள் நிறைய குழப்பம் இருந்தது. இது சரியாக வருமா?. சரியாக எடுக்க முடியுமா? என்கிற பயமும் இருந்தது.. எனவே இரண்டு நாட்கள் ஷூட்டிங்கை நடத்திவிட்டு இந்த படத்தை விட்டு விடலாம் என்று கூட நான் நினைத்தேன்.
அந்த சமயத்தில் என் அதிஷ்டம் சசியை நான் ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். அப்போது எனக்கு பட வாய்ப்பு கிடைத்த்து பற்றி மிகவும் சந்தோஷப்பட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். ஆனால் நானோ இல்லை. இது நடக்காது என்று சொன்னேன். அதிர்ச்சியுடன் என்னாச்சி? என்று கேட்டார். நான் என் பிரச்சினையை சொன்னேன்.
அடுத்த கட்டுரையில்