அனிருத்தின் ரம் - போதையேறிய இசைக்கு தயாராகுங்கள்


Caston| Last Modified திங்கள், 2 நவம்பர் 2015 (13:34 IST)
அனிருத்தின் பெயர் டைட்டிலில் வருகையில் மொத்த திரையரங்கும் ஆர்ப்பரிக்கிறது. குறுகிய காலத்தில் இளைஞர்களின் செல்லமாகிவிட்டார் அனிருத். அவரது போதையேறிய இசைக்கு இன்று எல்லோரும் ரசிகர்கள்.

 

 
 
தெலுங்குப் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் அனிருத், ரம் என்ற தமிழ்ப் படத்துக்கு இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அப்படியென்ன விசேஷம்.
 
சரியாகச் சொன்னால், எந்த விசேஷமும் இல்லை. அனிருத் இசையமைத்த வேலையில்லா பட்டதாரியில் தனுஷின் அப்பாவி தம்பியாக வருவாரே... அவர் பெயர் ரிஷிகேஷ். ரம் படத்தின் மூலம் ரிஷிகேஷ் ஹீரோவாகிறார்.
 
தனுஷ், சிவ கார்த்திகேயன் என்று இளம் நடிகர்களுக்கு அனிருத்தான் இசை முகவரி. அந்த வரிசையில் ரிஷிகேஷும் இணைகிறார்.
 
படத்தின் பெயருக்கேற்ப படத்தின் இசையும், பாடல்களும் போதையேற்றும் என நம்பலாம்.


இதில் மேலும் படிக்கவும் :