1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (17:09 IST)

இசையில் எக்ஸ்ட்ரா மைலேஜ் காட்டும் அனிருத்

இசையில் எக்ஸ்ட்ரா மைலேஜ் காட்டும் அனிருத்

தெலுங்கில் முதல்முறையாக இசையமைக்கிறார் அனிருத். அத்துடன் தமிழிலும் கை நிறைய படங்கள். அதில் முக்கியமானது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ரெமோ.


 
 
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் அனிருத் முடித்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இதே அனிருத், நேரமில்லை என்று பல படங்களை ஒப்புக் கொண்டு விலகியது ஒருகாலம். இப்போது அசுர வேகத்தில் அனைத்துப் பணிகளையும் முடித்து வருகிறார்.
 
பீப் பாடல் சர்ச்சைக்குப் பிறகு அனிருத்திடம் ஒரு ஒழுங்கு கூடிவந்திருப்பதாக கூறுகிறார்கள். ரெமோ விஷயத்தை கேட்கையில், அது உண்மைதான் போலிருக்கிறது.