1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. An Interview with Actress Sanjana: Journey from IT Job to 'Kana Kandenadi' Serial Fame

ஹார்ட் பீட் 3யில் எனது கேரக்டரின் சுவராஸ்யம்.. சின்னத்திரை நவரச நாயகி சஞ்சனா

சஞ்சனா பேட்டி
'ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் மற்றும் 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த சஞ்சனா, தற்போது 'கனா கண்டேனடி' தொடரில் 'ரேவதி' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இத்தொடரில் இவருடைய யதார்த்தமான நடிப்பிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
 
சமீபத்திய பேட்டியில் சஞ்சனா பகிர்ந்து கொண்டதாவது: "'கனா கண்டேனடி' சீரியலில் நடிக்கும் கவிதா மற்றும் சைத்ரா ஆகியோர் நிஜ வாழ்க்கையிலும் எனது சிறந்த தோழிகள். கவிதாவும் நானும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்கள். 'பொன்னி' சீரியலில் பிக் பாஸ் தர்ஷிகாவிற்கு பதிலாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம், எனக்கு இந்த புதிய சீரியல் வாய்ப்பை பெற்றுத் தந்தது. மேலும், 'பொன்னி' சீரியல் மூலம் வைஷ்ணவியும், பிக் பாஸ் சபரியும் எனக்கு நல்ல நண்பர்களாக மாறினர்" என்றார்.
 
தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், 18 வயதில் மாடலிங் செய்ய தொடங்கி, பின் பெங்களூரில் ஐடி வேலைக்கு சென்றதாக கூறினார். ஆனால், அந்த வேலை திருப்தி தராததால், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு திரும்பியுள்ளார். 'ஹார்ட் பீட்' தொடரில் மொட்டை தலையுடன் நடித்த சவாலான கதாபாத்திரம் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. தற்போது 'ஹார்ட் பீட் 3' வரவிருப்பதாகவும், அதில் தனது கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் சஞ்சனா புன்னகையுடன் முடித்துக் கொண்டார்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்தேன்!.. ஆனா அவர்!.. நிவேதா பெத்துராஜ் கலகல பேட்டி!..