தேசிய விருது - கமல், மம்முட்டியை முந்திய அமிதாப்பச்சன்


Murugan| Last Updated: திங்கள், 28 மார்ச் 2016 (14:37 IST)
2015 -ஆம் வருடத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்கு படத்துக்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இது நடிப்புக்காக அவருக்கு கிடைத்திருக்கும் நான்காவது தேசிய விருதாகும்.

 

 
சிறந்த நடிப்புக்கான தேசிய விருதில் கமல், அமிதாப், மம்முட்டி ஆகிய மூவரும் தலா 3 தேசிய விருதுகள் பெற்றிருந்தனர். இதில் யார் முதலில் நான்காவது தேசிய விருதை பெறுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அமிதாப் கமல், மம்முட்டியை முந்திக் கொண்டு நான்காவது விருதை வென்றிருக்கிறார். 
 
பாலிவுட் படமான ‘பிகு’ வில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்துக்காக கங்கனா ரானவத் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். இது அவருக்கு கிடைத்துள்ள 3- வது விருதாகும்.


இதில் மேலும் படிக்கவும் :