வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 19 ஜனவரி 2015 (11:05 IST)

அமிதாப்பச்சன் குடிகாரரானதற்கான காரணம் தெரியுமா?

அமிதாப்பச்சன் குடிக்கு எதிரானவர். நடிகர்கள் மட்டுமில்லை யாராக இருந்தாலும் குடிப்பது தீங்கு என்ற கருத்து உள்ளவர். அவர் ஷமிதாப்பில் முழு குடிகாரராக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லரில் குடியை வைத்தே தன்னை அவர் விளக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.


 
குடிக்கு எதிரான அமிதாப் எப்படி ஷமிதாப் படத்தில் குடிகாரரானார்...? 
 
ஷமிதாப்பில் அமிதாப்பச்சனின் கதாபத்திரம் மன அழுத்தத்தாலும், ஈகோவாலும் குடிக்கு ஆளான நபரை பிரதிபலிக்கிறது. அதனால்தான் ஷமிதாப்பில் குடிகாரனாக நடித்துள்ளார். சில நடிகர்கள், குடிக்கிற காட்சியில் நிஜமாகவே குடிக்கின்றனர். அது தவறு, கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் அமிதாப்.
 
நடிகர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை.