1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. amirkhan going to get married third time

3வது திருமணத்திற்கு ரெடியாகும் அமீர்கான்!.. பாலிவுட்டில் பரபரப்பு!...

amir khan
பாலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அமீர்கான். 90களில் காதல் மன்னனாக பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். 90களில் அமீர்கானின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகி வசூலை பெற்றது.

இவர் நடிப்பில் வெளியான லகான் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக தங்கல் திரைப்படம் சீனா போன்ற நாடுகளில் கூட வரவேற்பை பெற்று அதிக வசூலை பெற்ற பாலிவுட் திரைப்படமாக இருக்கிறது.  இந்நிலையில்தான் விரைவில் அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்யவிருக்கிறார். ஏற்கனவே ரீனா தத்தா என்பவரை 1986 ம் வருடம் திருமணம் செய்தார்.

2002ம் வருடம் அவரை விவாகரத்து செய்தார். அதற்கு 2005ம் வருடம் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். 2021ம் வருடம் அது விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில்தான்,  ஐந்து வருடங்களுக்கு கழித்து தற்போது கௌரி ஸ்பிராட் என்பவரை வருகிற ஜூலை 5ஆம் தேதி அமீர்கான் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
நோட்டீஸ் அனுப்பிட்டு இப்ப என்ன வாழ்த்து?!.. இளையராஜாவை திட்டும் ரசிகர்கள்!..