அமீர் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா

அமீர் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா

 
Sasikala| Last Modified வியாழன், 16 ஜூன் 2016 (11:08 IST)
ஆதிபகவன் படத்துக்குப் பிறகு இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அமீர், ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

 
 
ஆனால், அப்படம் குறித்து இன்றுவரை சரியான தகவல்கள் இல்லை. சிம்பு படத்தை இயக்குவதாக கூறப்பட்டதை சிம்பு உறுதி செய்தார். அடுத்த வருடம் அமீர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சில தினங்கள் முன்பும் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
 
சமீபத்திய செய்தி, அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார்.
 
மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடித்து வரும் ஆர்யா, அதனைத் தொடர்ந்து அமீர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அமீரின் வழக்கமான கூட்டணியான - இசை யுவன், ஒளிப்பதிவு ராம்ஜி - இந்தப் படத்திலும் தொடரவிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....


இதில் மேலும் படிக்கவும் :