வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 9 ஜூன் 2014 (13:34 IST)

விஜய், அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் - படங்கள்

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7 -ம் தேதி மாலை கேரளா ஆலுவாயில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. 
இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தந்த நிலையில் ஜுன் 7 திருமண நிச்சயதார்த்தம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி 7 -ம் தேதி மாலை ஆலுவாயில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் விஜய்யும், அமலா பாலும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
 

இந்த நிகழ்ச்சியில் இருதரப்பினரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர் விக்ரம், பொன்வண்ணன், நடிகை அனுஷ்கா, சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜீ.வி., அவரின் மனைவியும் பாடகியுமான சைந்தவி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.





விஜய், அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் - படங்கள்






விஜய், அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் - படங்கள்