தொடர்புடைய செய்திகள்
- ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...
- அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..
- அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...
- 19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!
- ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!
அட்லீயின் ‘ராக்கா’.. அல்லு அர்ஜூனை விட தீபிகாவுக்கு 7 மடங்கு சம்பளம் குறைவா? ராஷ்மிகாவுக்கு எவ்வளவு?
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படம், அதன் பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் நட்சத்திர பட்டாளத்தால் இந்திய திரையுலகையே அதிர வைத்துள்ளது.
சுமார் 700 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவர் இப்படத்தில் காவல்துறை அதிகாரி, பாதி மனிதன் பாதி அரக்கன் மற்றும் தந்தை என மூன்று விதமான வேடங்களில் நடிக்கிறார்.
அதேசமயம், பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோனுக்கு 25 கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது அல்லு அர்ஜுனின் ஊதியத்தை விட ஏழு மடங்கு குறைவாகும். மற்றொரு நாயகியான ராஷ்மிகா மந்தனாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் அல்லு அர்ஜுனின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
