வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : சனி, 31 அக்டோபர் 2015 (08:48 IST)

வேதாளம் படத்திற்கு யு சான்றிதழ்: நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள்

சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் படத்தில் சென்சாரில் எந்த வித காட்சியும் நீக்கமும் இன்றி யூ சான்றிதழ் பெற்றுள்ளதால் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்று சொல்லப்படுகிறது.


 


அஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’.

இந்த படத்திற்க்கு சென்சார் போர்டு யூ சான்றிதழ் வழங்கியுள்ளதால். இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதியாகிவிட்டது. மேலும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் படம் வெளியான பின்னர் காட்சிகள் வெட்டப்படும் சூழ்நிலையும்  உருவாகாது. இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்பதை சென்சார் போர்டெ தெரிவித்துள்ளதால் எல்லா தரப்பினரிடமிருந்தும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, இந்த படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் ரவிச்சந்திரனின் பிறந்தநாளான அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் வெளியிட்ட 4 வாரங்களில் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த திரைப்படத்தின் டீஸரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்திற்கும் மேல் தாண்டியுள்ளது.

இந்த படம் சென்சார் சென்று வந்ததும் பட டிரெய்லரை வெளியிகம் என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இன்னும் டிரெஸ்லரை வெளியிடாமல் படக்குழுவினர் தாமதபடுத்தி வருவதால் ரசிகர்களை ஏமற்றம் அடைய செய்துள்ளனர். ஆனால் இன்னும் சில தினங்களில் வேதாளம் படத்தின் டிரெய்லரை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.