1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ajithkumar wants to do car race lfe long

இன்னும் எத்தனை நாள் கார் ரேஸ்?.. அஜித்குமார் கொடுத்த பதில்!..

ajithkumar ajithkumar car racing
நடிகர் அஜித்குமார் நடிகராக மட்டுமில்லாமல் கார் ரேஸராகவும் இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அஜித்குமாரின் ரேசிங் அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் நடைபெற்ற கார் பந்தயங்கலில் கலந்து கொண்டு வருகிறது.
 
இதில் சில போட்டிகளில் மூன்றாவது இடத்தை அஜித்தின் ரேஸிங் அணி வென்றது. அஜித் தமிழ்நாட்டில்தான் மீடியாவை சந்திப்பது இல்லையே தவிர வெளிநாடுகளில் இருக்கும் போது அங்குள்ள ஆங்கில ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுக்கிறார்..
 
இந்நிலையில் சமீபத்தில் அப்படி கொடுத்த ஒரு பேட்டியில் ‘என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயங்களில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலமும் ஒவ்வொரு வருடமும் கார் பந்தயங்களில் பங்கேற்க நான் ஆசைப்படுகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். சினிமாவைப் பொறுத்தவரை குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அஜித்தின் திரைப்படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
 
அஜித்தின் புதிய படத்தின் இயக்குனர் யார்? இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும்? என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்!.. 2 ஆயிரம் கோடி வசூல் செய்த Obsession திரைப்படம்!..