1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ajithkumar rejected mumbai producer for ak64

ஆதிக்கை கடுப்பாக்கிய அஜித்குமார்!.. இதுக்கு மேலயும் நம்பினா டைம் வேஸ்ட்!..

adhik
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தும் இன்னும் அவரின் அடுத்த படம் துவங்கப்படவில்லை. அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப்போகிறார் என சொல்லப்பட்டது. ஆனாலும், இப்போதுவரை இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமல் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார். அந்த சம்பளத்தை கொடுக்க கோலிவுட்டில் மட்டுமில்லை. மற்ற மாநிலங்களில் இருந்தும் எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.
 
எனவேதான், பல மாதங்களாக முயற்சி எடுத்தும் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஒரு வழியாக அங்கும் இங்கும் அலைந்து மும்பையில் உள்ள தயாரிப்பாளரை பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன் அவரை அஜித்துடன் பேச வைத்திருக்கிறார். ஆனால் என்ன காரணமோ அஜித்துக்கு அவரை பிடிக்கவில்லை. எனவே இவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
 
தயாரிப்பாளரே கிடைக்காத சூழ்நிலையில் ஒருவரை கூட்டி வந்தால் அஜித் இவரை வேண்டாம் என்கிறாரே என அப்செட்டான ஆதிக் ரவிச்சந்திரன் தெலுங்கு நடிகர் பாலையாவிடம் ஒரு கதையை சொல்லி அவரை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டாராம்.
அடுத்த கட்டுரையில்
சூர்யாவின் 50வது படத்தை இயக்கப்போவது அவரா?!.. தமிழில் யாருமே இல்லையா?..