1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ajithkumar doing movie with director shankar

ஷங்கருடன் இணையும் அஜித்!.. இது செம அப்டேட்!..

ajithkumar shankar
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என எல்லோராலும் அழைக்கப்பட்டவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், எந்திரன், ஐ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

இவரின் இயக்கத்தில் நடிக்க மற்ற மொழி நடிகர்களே ஆசைப்பட்ட காலங்கள் இருந்தது. ஆனால் அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடையவே தற்போது எந்த நடிகரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில்தான் அஜித்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் டேர் டெவில் படம் முடிந்த பின் இந்த படம் துவங்கப்படலாம் என சொல்கிறார்கள்.

ஏனெனில்,வேள்பாரி நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது இன்னும் காலதாமதமாகும் என்பதால் அதற்கு முன்னால் ஒரு திரைப்படத்தை இயக்கிவிடலாம் என ஷங்கர் முடிவெடுத்திருக்கிறாராம். அஜித்தும், ஷங்கரும் இணைந்தால் ரசிகரக்ளுக்கு ஒரு முழு விருந்தாக அமையும் என சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி இல்லை.. பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி! – சூரி