ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..
நடிகர் அஜித்துக்கு சிறு வயது முதலே பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உண்டு.. அவர் இளைஞனாக இருந்தபோது நிறைய பைக் ரேஸ்களில் கலந்து கொண்டார்.. அதில் அடிபட்டு அவரின் முதுகு மற்றும் கால் பகுதிகளில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.
அதேபோல் கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொண்டு வந்தார்.. ஆனால் திருமணத்திற்கு பின் அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை..
அதேநேரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் அஜித்குமார் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்றெல்லாம் அவர் பேட்டி கொடுத்து வருகிறார்.. தற்போது அஜித் குமாரின் டீம் துபாயில் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறது..
இந்நிலையில், கார் ரேஸில் ஈடுபடுவதற்கு முன் நீங்கள் செண்டிமெண்டாக எதை செய்வீர்கள்? என நிருபர் கேட்டதற்கு என் எப்போதும் எனது வலது கையில் கிளவுஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்று தெரிவித்தார் அஜித்..