அஜித், விஜய் ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண சிம்பு

Cauveri Manickam| Last Modified திங்கள், 22 மே 2017 (11:53 IST)
அஜித், விஜய் ரசிகர்களுக்கு, தன்னுடைய ட்விட்டரில் அட்வைஸ் செய்துள்ளார் சிம்பு.

 
எம்.ஜி.ஆர். – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என ஒப்பீடு செய்வது, காலம்காலமாக நடந்து வருகிறது. இவர்களுக்குள்  போட்டி என்று ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூக வலைதளங்களின் பயன்பாடு  அதிகரித்த பின்னர், இந்த சண்டை பெரிதாக மாறியிருக்கிறது.
 
அஜித் படத்தின் டீஸர், டிரெய்லர், படம் வெளியாகும்போது ‘ஆமைக்குஞ்சு’ என்று விஜய் ரசிகர்கள் தாக்குவதும், விஜய்  படத்தின் டீஸர், டிரெய்லர் ரிலீஸாகும்போது ‘அணில் குஞ்சு’ என்று அஜித் ரசிகர்கள் தாக்குவதும் வழக்கமாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, தற்போது சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே ஆபாசமாகத் திட்டிக் கொள்கின்றனர்.
 
அத்துடன், அஜித்தைப் பிடிக்கும் என்று சொல்லும் நடிகர்களை விஜய் ரசிகர்களும், விஜய்யைப் பிடிக்கும் என்று சொல்லும்  நடிகர்களை அஜித் ரசிகர்களும் தவறாகத் திட்டும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. இதைக் கண்காணித்துவந்த சிம்பு, ‘சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் தவறாக விமர்சிப்பது, திட்டிக் கொள்வது போன்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, அந்த நேரத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள்’ என்று அட்வைஸ் செய்துள்ளார் சிம்பு.


இதில் மேலும் படிக்கவும் :