அஜித்துக்கு போட்டியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்கள்


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (12:52 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57'. 

 
 
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். 
 
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது. `தல 57' படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாத தெரிகிறது.
 
இந்நிலையில், சல்மான் கானின் `டியூப் லைட்' படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தையும் அதே நாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :