பிறந்த நாளை ’தல’ அஜித்துடன் கொண்டாடிய நடிகர் சூரி


Ashok| Last Updated: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (19:29 IST)
நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி தனது 38ஆவது பிறந்த நாளை குடும்பத்துடன் அஜீத் வீட்டில் கொண்டாடியுள்ளார்.
 
 
நடிகர் சூரிக்கு இது மறக்க முடியாத நாளாகும். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் பிறந்த நாளை முன்னிட்டு சூரியை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும், நடிகர் விஷால் சூரிக்காக வடபழனி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கி, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், தல அஜீத் நடிகர் சூரியை திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்துடன் தனது இல்லத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சூரியும் குடும்பத்துடன் நடிகர் அஜித் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
அப்போது, சூரிக்கு அஜித் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சூரியின் குழந்தைகளுடனும், தாய் சேங்கை அரசியிடம் அஜீத் வெகுநேரமாக மனம் விட்டுப் பேசியுள்ளார். மேலும், சூரி குடும்பத்தாருடன் அஜீத் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
 
அப்பொழுது இந்த பிறந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாள் என்றும் .நான் தல அஜீத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அப்பொழுது, அஜித்திடம் ’உங்கள் படத்தில் நடிக்க விருப்பமாக உள்ளேன்’ என்று சூரி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :