ரஜினியின் சாதனையை நெருங்கிவிட்ட அஜித்: ரசிகர்கள் உற்சாகம்


sivalingam| Last Modified செவ்வாய், 6 ஜூன் 2017 (22:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் செய்த பல சாதனைகள் இன்னும் யாராலும் உடைக்க முடியாமல் இருக்கும் நிலையில் முதல்முறையாக ரஜினியின் சாதனையை தல அஜித் நெருங்கிவிட்டதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்


 


இதுவரை வெளியான தமிழ் சினிமா டீசர்களில் யூடியூபில் அதிக லைக் வாங்கிய படம் என்ற பெருமையை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி தக்க வைத்துள்ளது. இந்த படத்தின் டீசருக்கு 4.64 லட்சம் லைக்குகள் இதுவரை கிடைத்துள்ளது. இதுவரை இந்த சாதனையை ஏன், 4 லட்சம் என்ற சாதனையை கூட எந்த படத்தாலும் தொட முடியாத நிலையில் சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் தற்போது 4 லட்சம் லைக்குகள் என்ற மைல்கல்லை தொட்டுவிட்டது.

இன்னும் ஒருசில நாட்களில் 'கபாலி' சாதனையை முறியடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 14 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மிகப்பெரிய சாதனையை செய்த 'விவேகம்' தற்போது லைக்குகளிலும் சாதனை செய்துள்ளதால் அஜித் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :