வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (12:45 IST)

பூஜையுடன் தொடங்கியது அஜித் படம்

பூஜையுடன் தொடங்கியது அஜித் படம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது.
 

 


வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவா அஜித்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பு. இந்தப் படத்தின் பூஜை கேளம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் எளிமையாக நடந்தது. 
 
ஆடி மாதத்தில் படப்பூஜைகள் நடத்தப்படுவதில்லை. அதனால், ஆடி மாதம் தொடங்குவதற்கு முன் அஜித் படத்தின் பூஜை போடப்படும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதன்படி பூஜை போட்டுள்ளனர். படப்பிடிப்பு முழுவீச்சில் எப்போதும் தொடங்கும் என தெரியவில்லை.
 
அனுஷ்காவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.