வியாழன், 11 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (16:27 IST)

அமெரிக்க டாலரில் சம்பளம் கேட்கும் அஜித்… துபாயில் செட்டில் ஆனதால் இது வேறயா?

அமெரிக்க டாலரில் சம்பளம் கேட்கும் அஜித்… துபாயில் செட்டில் ஆனதால் இது வேறயா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் – ஆதிக் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக அமைந்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்றும் அதை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அஜித் அதிக சம்பளம் கேட்பதால் அடுத்த படம் தாமதம் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அஜித் தனது சம்பளத்தை அமெரிக்க டாலரில் கேட்பதாக சொல்லப்படுகிறது. துபாயில் வீடு வாங்கி கார் ரேஸ் பந்தயத்துக்காக அதிகமாக வெளிநாடுகளில் இருப்பதால் அஜித் டாலரில் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இது தயாரிப்பாளர்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.