வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (14:11 IST)

உப்புதான் நமக்கு வொர்க் அவுட்டாகும் - அஜீத்திடம் கலகலத்த விவேக்

என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தை போல விவேக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுகிறார்.
வேடம் போடுவது, மிமிக்ரி செய்வது எல்லாம் விவேக்கின் காமெடி டைமில் ஒரு பகுதி. சுருளிராஜன் முதற்கொண்டு வடிவேலுவரை பலரை இமிட்டேட் செய்துதான் விவேக் சமீபமாக காமெடி செய்து கொண்டிருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் அவதாரம் அதில் ஒருபகுதி என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவரை இந்த லுக்கிற்கு மாற்றியதே அஜீத்தானாம்.
 
இந்தப் படத்தில் என்னைப் போல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் நடியுங்கள் என்றிருக்கிறார் அஜீத். அதற்கு விவேக், உங்களுக்கு சால்ட் அண்ட் பெப்பர் மட்டுமில்லை எந்த கெட்டப்பும் செட்டாகும். எனக்கு சால்ட் அண்ட் பெப்பரில் சால்ட் மட்டும்தான் வொர்க் அவுட்டாகும் என்றிருக்கிறார்.
 
படத்தில் அஜீத்துடன் பணிபுரியும் போலீசாக விவேக் வருகிறார். கௌதமின் மற்ற படங்களைப் போல முழுக்க சீரியசாக இல்லாமல் கொஞ்சம் சிரிக்கிற மாதிரியும் இருக்குமாம் என்னை அறிந்தால்.