1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 11 மே 2016 (16:32 IST)

அதிமுகவுக்கு ஆதரவு - பெப்சியின் செயல் சரியா?

அதிமுகவுக்கு ஆதரவு - பெப்சியின் செயல் சரியா?

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக ஜெயலலிதாவை சந்தித்து பெப்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது குறித்து அதிமுகவின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


 
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை 10-5-2016 அன்று (நேற்று) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப் படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், துணைத் தலைவர்கள் கே.சம்பத், ஏ.சபரி கிரிசன், வி.ராமன், டி.கே.மூர்த்தி, கே.ஜி.ஜீவானந்தம், எஸ்.சுந்தர், இணைச் செயலாளர்கள் ஆர்.தனபால், ஆர்.எஸ்.ராஜா, என்.ராதா, பி.ரமணபாபு ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தங்களுடைய அமைப்புகளின் ஆதரவை தெரிவித்தனர்.
 
அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
 
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
திரையுலக சங்கங்கள் அரசியலுக்கு அப்பார்ப்பட்டவை. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கியவை. 
 
அப்படியிருக்கையில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது ஜனநாயகமா? ஏற்புடையதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.