மீண்டும் விமல் படத்துக்கு குரல் கொடுக்கும் சிவகார்த்திகேயன்

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:36 IST)
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் போது சிவகார்த்திகேயன் விமலைவிட சின்ன ஸ்டார். இப்போது அஜித், விஜய்க்கு டஃப்  கொடுக்கும் மெகா ஸ்டார். ஆனால், விமல்? அதே இடத்தில்தான் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவர்கள் நட்பில் எந்த விரிசலுமில்லை.

 
விமலின் மாப்ள சிங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடினார். இப்போது விமல் நடிக்கும் மன்னர் வகையறா  படத்திலும் ஒரு பாடல் பாடவிருக்கிறார். விமல், கயல் ஆனந்தி நடித்துவரும் இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்கி  வருகிறார்.
 
ஜோக்ஸ் பிஜோய் மன்னர் வகையறா படத்துக்கு இசையமைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :