மீண்டும் கூட்டணி சேரும் தனுஷ், யுவன் மற்றும் செல்வராகவன்..!!

மீண்டும் கூட்டணி சேரும் தனுஷ், யுவன் மற்றும் செல்வராகவன்..!!


Sasikala| Last Modified சனி, 15 அக்டோபர் 2016 (13:05 IST)
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

 
 
தனுஷ், யுவன், செல்வராகவன் கூட்டணி இதற்கு முன்னர் புதுப்பேட்டை படத்தில் இறுதியாக இணைந்திருந்தது. செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த “எங்க ஏரியா உள்ள வராத” என்ற பாடலை தனுஷ் பாடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் அந்த ஆண்டின் சிறந்த பாடல்கள் வரிசையிலும் இடம் பெற்றிருந்தது.
 
இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது சகோதரர் செல்வராகவன் இயக்கி வரும் ”நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தில், யுவன் இசையமைத்துள்ள பாடலை பாடியிருப்பதாகவும், பத்து ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாகவும் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :