1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. advocate notice about jananayagan leaked scene

ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்‌ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...

jananayagan
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் போனதால் படம் வெளியாகவில்லை. எனது படம் தற்போது வரை வெளியாகவில்லை.. படம் தற்போது மறு தணிக்கையில் இருப்பதால் தேர்தலுக்குப் பின்னரே வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில்தான், ஜனநாயகன் திரைப்படம் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. ஒருபக்கம் முழு படமும் வெளியானதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பலரும் அதை டவுன்லோட் செய்து யுடியூப், எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

notice
notice


இந்நிலையில்தான், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.. அதில் ஜனநாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யுடியூப், இணையதளங்கள், டோரண்டுகள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, பகிர்வதோ, பதிவேற்றுவதோ, சேமிப்பதோ கடுமையான குற்றம். இதை செய்யும் ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள்’ என அதில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
ரிலீசுக்கு முன்பே லீக்கான ஜனநாயகன் காட்சிகள் - எச்.வினோத் போட்ட பதிவு