டேர் டெவில் பக்கா கமர்ஷியல்!.. அஜித் சார் கொடுத்த நம்பிக்கை!.. ஆதிக் உருக்கம்!...
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்துவிட்டது. தற்போது வரை அஜித்தின் அடுத்த படம் துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் டேர் டெவில் என அறிவிக்கப்பட்டது.
தலைப்பை பார்க்கும்போது இதுவும் குட் பேட் அக்லி போல ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாகவே இருக்கும் என அஜித் ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதை ஆதிக் ரவிச்சந்திரன் மறுத்திருக்கிறார்.
குட் பேட் அக்லி போல இன்னொரு படத்தை எடுக்க முடியாது.. அந்த படம் போல டேர் டெவில் இருக்காது. இது முழுக்க முழுக்க குடும்பங்கள், குழந்தைகள் என எல்லோருக்குமான கமர்சியல் படமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும், என் வாழ்க்கையில் கடினமான தருணத்தில் நான் அஜித் சாரை சந்தித்தேன்.. உன்னால் முடியும்.. உன்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர் அளித்த ஊக்கத்தின் காரணமாகவே மார்க் ஆண்டனி படத்தை என்னால் எடுக்க முடிந்தது எனக் கூறியிருக்கிறார்.