1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actress trisha gone to kushbu wedding alone

சஸ்பென்ஸ் ஓவர்!. குஷ்பு வீட்டு கல்யாணத்துக்கு தனியா போன திரிஷா..

khushbu
தற்போதைய முதல்வரும் முன்னாள் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்த போது விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். அந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஒரு திருமண விழாவில் நடிகை திரிஷாவுடன் விஜய் கலந்து கொண்டார்.

எனவே, சங்கீதா சொன்னது திரிஷாவைத்தான் என பலரும் உறுதி செய்தார்கள்
. சமீபத்தில் கூட விஜயின் பிறந்தநாள் தொடர்பாக திரிஷா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது. ஆனால் பலரும் அதை ஏ.ஐ போட்டோ எனவும் சொல்கிறார்கள். விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை..

இந்நிலையில்தான், நேற்று கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்திற்கு விஜய் தனியாக போவாரா இல்லை திரிஷாவையும் அழைத்து செல்வாரா என்கிற விவாதம் எழுந்தது. திரிஷாவுடன் போனால் மீண்டும் விஜயின் இமேஜ் கெட்டுப் போகும்.. எனவே அப்படி போவதாக இருந்தால் அவர் தனியாக போக வேண்டும் என விஜய்யின் நல விரும்பிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

ஆனால், குஷ்பு விட்டு திருமணத்திற்கு விஜய் செல்லவில்லை.. அதேநேரம் திரிஷா தனியாக சென்றிருக்கிறார்.  இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. இது விஜயின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
Good Doctor வெப்சீரியஸின் காப்பிதான் தர்மனா?!.. அஷ்வத் மாரிமுத்து விளக்கம்!...